31 Jan 2015

மகளை பலமுறை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

SHARE
14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை ஆயித்தியமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் பாடசாலை மாணவியாவார். அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, குற்றச் சம்பவங்களை பரிசீலனை செய்யும் பொலிஸ் பிரிவின் (சொகோ) மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சந்தேகநபர் தனது மகளை பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் அவர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: