ஊடக
நிகழ்ச்சிகளை தீர்மானிப்பதில் நிறுவனங்களுக்கு எவ்வித அழுத்தமும்
செய்வதில்லை என்ற அரசின் கொள்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஊடக
மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன
தெரிவித்தார்.
சுவர்ணவாஹினி மற்றும் ரூபவாஹினி
ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும் முல்பிட்டுவ நிகழ்ச்சியை நடத்தும் பந்துல
பத்மகுமாரவை நீக்க அரச தீர்மானித்துள்ளது என சில ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன. அதனை ஊடக அமைச்சு நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.சுவர்ணவாஹினி
நிறுவனம் காலையில் ஒளிபரப்பும் பத்திரிகைகள் கண்ணோட்டமாக இதுவரை நடத்தி
வந்த முல்பிட்டுவ நிகழ்ச்சியை நடத்திய பந்துல பத்மகுமாரவை நீக்குவது
தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஊடக அமைச்சு
கவனம் செலுத்தியுள்ளது.
உயர் மட்ட உத்தரவினால்
மேற்கொள்ளப்படுவதாகவும் அது அரசாங்கத்தினால் செய்யப்படுவதாகவும்
திரிபுபடுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன. சுவர்ணவாஹினி நிறுவனத்தினால்
மேற்கொள்ளப்பட்ட இம்மாற்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்விதமான
தொடர்பும் இல்லை. அது அந்நிறுவனத்தினாலேயே மேற்கொண்ட தீர்மானம் என்று நாம்
நம்புகிறோம்.
நிகழ்ச்சிகள் தீர்மானிப்பதில் ஊடக
நிறுவனங்களுக்கு எவ்விதமான அழுத்தமும் கொடுப்பதில்லை. ஊடக சுதந்திரத்தை
முழுமையாக பேணுவதே அரசின் கொள்கை.
இக்கொள்கை தனியார் ஊடகங்களுக்கல்ல- அரச ஊடகங்களுக்கும் பொருந்தும் என ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கொள்கை தனியார் ஊடகங்களுக்கல்ல- அரச ஊடகங்களுக்கும் பொருந்தும் என ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment