23 Jan 2015

கிழக்கு மாகாணத்தில் 76,062 ஹெக்டயார் நெற்செய்கை பாதிப்பு

SHARE
2014/2015  பெரும் போகத்தில் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76,062 ஹெக்டயார் நெற்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 23,085 ஹெக்டயர்களும் மட்டகளப்பில் 35,851 ஹெக்டயர்களும் அம்பாறையில் 17,125 ஹெக்டயர்களும் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கிழக்கு மாகாணத்தில் 4768 ஹெக்டர்யார் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட உப உணவுப்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.திருகோணமலையில் 1319 ஹெக்டயார்களும் மட்டக்களப்பில் 1730 ஹெக்டயார்களும அம்பாறையில் 1718 ஹெக்டயார்களும் உள்ளடங்குகின்றன.
SHARE

Author: verified_user

0 Comments: