31 Jan 2015

கிழக்கு மாகாண ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்!

SHARE
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதயினால் நியமிக்கப்பட்ட ஒஸ்டின் பெர்ணாண்டோ  நேற்று  சுபநேரத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

இலங்கை நிருவாக சேவை மூத்த அதிகாரயான இவர் 50 வருடங்களுக்கு மேல் மக்கள் சேவையோடு அனுபவமுள்ளவராக காணப்படுகின்றார்.1963 ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்த இவரிற்கு 1967ம் ஆண்டு இலங்கை சிவில் சேவைக்கு தெரிவு செய்யப்பபட்டதுடன் மட்டக்களப்பு மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையாளராகவும் கடமைமாற்றியுள்ளார்.

பொலனறுவை நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர், கூட்டுறவு ஆணையாளர், பதிவாளர் நாயகம் புனருத்தாபன அமைச்சின் செயலாளர், தபால்மா அதிபர், இரத்தினக்கல் கூட்டுத்தாபன தலைவர், உள்ளுராட்சி மாகாண சபை அலுவல்கள் அமைச்சின் செயலாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் முன்னர் கடமையாற்றியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: