ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 
ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் மட்டக்களப்பு 
பூராகவும் பிரச்சார நடவடிக்கைளில் 5.1.2015 அதாவது  இன்று 
ஈடுபட்டிருந்தனர். 
 இப்பிரச்சார நடவடிக்கைளில் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் 
விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான 
சி.சந்திரகாந்தன் மற்றும்   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 
செயலாளர் பூ.பிரசாந்தன் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரமேஸ்,கட்சியின் 
பொருளாளர் ஆ. தேவராஜ் மற்றும் கட்சியின் மகளிர் அணித்தலைவி ம.செல்வி உட்பட 
பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதோடு கிராமங்களின் இளைஞர் 
அமைப்புக்கள்,விவசாய சங்கங்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்கள்  என அனைத்து 
அமைப்புக்களும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. 
 குறிப்பாக அனைவரும் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் சின்னங்களையும் 
உருவங்கள் காணப்படுகின்ற  ஆடைகளை அணிந்து கொண்டு பிரச்சார நடிவடிக்கைகளில் 
ஈடுபட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது

0 Comments:
Post a Comment