9 Jan 2015

அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுமாறு புதிய ஜனாதிபதி வேண்டுகோள்

SHARE
ஜனாதிபதி தேர்தல் 2015 இன் வெற்றியை அமைதியான- எவருக்கும் பாதிப்பேற்படாத வகையில் கொண்டாடுமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (09) தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை எவ்வித பாகுபாடுமின்றி நேர்மையானதும் நீதியானதுமான முறையில் நடத்த உறுதியான முறையில் செயற்பட்ட தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட திணைக்கள ஊழியர்களுக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீதியும் நேர்மையுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய இலங்கை பொலிஸார்- முப்படையினர் அனைவருக்கும் கௌரவத்துடன் கூடிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: