16 Jan 2015

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கோமாதா பொங்கல் விழா

SHARE
கிழக்கு இந்து ஊடகவியயலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கோமாதா பொங்கல் விழா இன்று வெள்ளிக் கிழமை (16) மட்டக்களப்பு – குருக்கள்மடம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கிழக்கு இந்து ஊடகவியயலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் பிரபல இந்துசமய விற்பனர் விஷ்வப் பிரம்ம ஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள், மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், மற்றும், களுவாஞ்சிகுடி கால் நடை வைத்திய அலுவலக உத்தியோகஸ்தர்கள், மட்.குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர், ஊடகவியலாளர் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இந்து சமய பாரம்பரிய முறைப்படி பசுக்களை குளிர்ப்பாட்டி, மலர் மாலை அணிவித்து, வைக்கோலிலே மடை பரவி பூஜைகள் நடைபெற்றன.

இந்து மக்களிடையே மறைந்து போகும் கோமாதா பொங்கல் விழாலை கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னின்று மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது. என இதில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.




















SHARE

Author: verified_user

0 Comments: