2 Jan 2015

கடைகள் உடப்புச் சம்பவத்திற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் கட்டனம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் தொகுதிக்குபட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்ற இரண்டு கடைகள் உடைப்பச் சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இச்சம்பம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ளிக்கிழமை (02) அதிகாலை இரண்டு மணியளவில் இரண்டு கடைகள் உடைக்கப் பட்டுள்ளதாக அறிகின்றேன். இப்பிரதேசத்திலுள்ள ஒரு சிலர், அவர்களது குறுகிய நோக்கங்களுக்காகச் செயற்பட்டு வருகின்றார்கள் என்பது இச்சம்பவதிலிருந்து புலனாகின்றது.
இந்த கடைகள் உடைத்த சம்பவத்தை சிலர் என் மீது பழிபோட நினைக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்ட நாளிலிருந்து தற்போது வரைக்கும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் எதுவித தேர்தல் வன்முறைகளும் இடம்பெறவில்லை. அதுபோலவே இத்தேர்தல் முடியும் வரைககும் எதுவித வன்முறைகளும் பட்டிருப்புத் தொகுதியில் நடைபெறாமலிருக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றேன்.

நானும், எனது குடும்ப பின்னணியும் எதுவித வன்முறைகளுக்கும் இதுவரையில் துணைபோகவிவ்லை, இனிமேலும் இவ்வாறான வன்முறைகளுக்கு துணைபோகப் போவதுமில்லை.

இவ்வாறு கடைகள் உடைத்து என்மீது வீண்பழிபோட நினைக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மைத்திரி பால சிறிசேனவிற்காக நாள் ஒன்றுக்கு 1000 பணத்தினைப் பெற்றுக் கொண்டு கூலிக்கு வேலை செய்யும் ஒர சிலரே இச்சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: