7 Jan 2015

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இந்தியா பயணமாகிறார்

SHARE
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான்கீமூன் தனது நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இவ்வாரம் இந்தியா பயணமாகிறார்.

இவ்விஜயத்தின் போது இந்திய தலைவர்களுடன் கூட்டங்கள் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார என பொதுச்செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் உறுதி செய்துள்ளார். இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த பேச்சாளர், பொதுச்செயலாளர் பெரும்பாலும் தலைநகரம் டில்லியிலும் குஜராத் மேற்கு பிரதேசங்களில் தங்குவார் என்றும் வெளியிட்டுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரோடு விஷேட பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: