3 Jan 2015

அதாஉல்லாவின் கோட்டைக்குள் ஹக்கீம்

SHARE
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த பிரசாரப் பொதுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழுவின் தலைவரும், மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு கலந்து கொண்டிருந்தனர்.

வழமை போன்று கூட்டத்தை குழப்புவதற்கு அமைச்சர் அதாஉல்லா தரப்பினர் எடுத்த அத்தனை முயற்சிகளும் இம்முறை தோல்வியடைந்த நிலையில் கூட்டம் முடிவுற்று கட்சிப் பிரமுகர்களும் பொது மக்களும் கலைந்து செல்லும் போது அக்கரைப்பற்று சாலிஹா நுழைவாயில் பகுதியில் டயர் எரித்து- தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எனினும் பொலிசார் விரைந்து செயற்பட்டு அவற்றை அகற்றி பாதையை வழமை நிலைக்கு கொண்டு வந்து அச
ம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தனர்.(mm)


SHARE

Author: verified_user

0 Comments: