3 Jan 2015

பிரேசில் அதிபராக தில்மா ரூசெப் பதவியேற்பு

SHARE
பிரேசில் அதிபராக தில்மா ரூசெப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த அக்டோபரில் நடந்த இரண்டாம் சுற்று தேர்தலில் குறைந்த  வாக்கு சதவிகித வித்தியாசத்தில் டில்மா ரூசெப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சுமார் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட விழாவில் இரண்டாவது முறையாக பிரேசில் அதிபராக  தில்மா ரூசெப் கடந்த வியாழன் 01 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார். பிரேசில் நாட்டின் அரசுடைமை எண்ணெய் நிறுவனங்களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக தில்மா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனாலும்இ தில்மாவின் செல்வாக்கு மக்களிடம் எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதைத் தேர்தல் முடிவு நிரூபிக்கிறது.

பிரேசிலியாவில் நடந்த பதவியேற்பு விழாவிற்குப் பின் பேசிய டில்மா ரூசெப் '' நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைப்பதே தனது முதல் இலக்கு . இதற்காக அரசு செலவினங்கள் முறைப்படுத்தப்படும் . எத்தகைய மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வாக்களித்தார்களோ அதை ஏற்படுத்தவதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார். மீண்டும் பதவியேற்றுள்ள தில்மா ரூசெபுக்குஇ தேக்க நிலையில் காணப்படும் நாட்டின் பொருளாதாரம்தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: