9 Jan 2015

மைத்திரிபால சிறிசேனவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து

SHARE
இலங்கையில் இடம்பெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

´நான் மைத்திரிபாலவை தொலைபேசியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையில் அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். ஒரு நெருங்கிய நண்பன், அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்´ என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: