1 Jan 2015

கிழக்கு மாகான சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஜெமீலின் அனைத்து பாதுகாப்பும் நீக்கம்

SHARE
கிழக்கு மாகான சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின்அனைத்து வகையான பாதுகாப்பும் அரசாங்கத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம் இவரது மெய்ப்பாதுகாவலர்களாக செயற்பட்ட ஐந்து பொலிசாரும் இன்று பொலிஸ் நிலையங்களுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளதுடன் இவரது வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகான சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் என்ற ரீதியில் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற 2 பொலிசாருக்கு மேலதிகமாக ஜெமீலுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போது மேலதிக பாதுகாப்பு மட்டுமல்லாமல் மாகாண சபை உறுப்பினருக்கான குறைந்தபட்ச பொலிஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை தொடக்கம் அவருக்கான அமைச்சரவை பாதுக்காப்பு பிரிவினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகான சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள அதேவேளை அக்கட்சியின் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களினதோ மாகாண அமைச்சர்களினதோ பாதுகாப்புகள் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(mm)
SHARE

Author: verified_user

0 Comments: