மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு
செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு அமைவாக உள்ளுராட்சி மாகாண சபைகள்
அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உள்ளுராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பை
அபிவிருத்தி செய்வதற்கு வாகனங்களை கொள்வனவு செய்து வழங்கும்; வழங்கும்
நிகழ்வு நேற்று (30) செவ்வாய்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி கலசார
விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி
ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய
காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி மன்றங்களை வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை
மாவட்டத்திலுள்ள 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 100 மில்லியன் ரூபா
பெறுமதியான வாகனங்கள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் வழங்கி
வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment