செங்கலடி, ஏறாவூரைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
எறாவூர் 5ம்
குறிச்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்
ஏகாம்பரம் பாக்கியநாதன் என்பவர் செங்கலடி செல்லம் தியேட்டருக்கு அண்மையில்
வீதியால் சென்றுகொண்டிருந்த போது கூரிய ஆயுதங்களினால் மிக மோசமாக தாக்கியதுடன் வீதியில் தூக்கி
எறிந்துவிட்டும் சென்றுள்ளனர்.
மிகவும் மோசமாக
தாக்கப்பட்ட நிலையில் இருந்த குறித்த நபரை பொது மக்கள் வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றுள்ளனர். இவர் தற்போது நிலையில் மட்டக்களப்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(mm)
0 Comments:
Post a Comment