12 Jan 2015

அரச பயங்கரவாத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் படடுள்ளது. த.தே.கூ. நா.உ. பொன்.செல்வராசா…

SHARE
ஆட்சி மாற்றத்திற்குக்  காரணம் இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை இனம் என்பதை ஒருபோதும் மறந்து விடமுடியாது.
தற்போது நாங்கள் நல்ல சந்தோசத்துடன் இருக்கின்றோம் அண்மையில் நாங்கள் இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தலைச் சந்தித்தோம். கடந்த 30 ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட எமது சமூகம் 2009களில் அந்தபோர் மௌனித்தும்கூட தொடர்ந்து அரச பயங்கரவாத்தால் தாக்கப் பட்டுக்கொண்டிருந்தோம். 

அந்த அரச பயங்கர வாதம் 2015
வரை நீடித்தது. தற்போது அந்த அரச பயங்கரவாத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் படடுள்ளது. 30 ஆண்டு காலமாககவும், 2009 ஆண்டுக்குப் பின்பும், பல சோதனைகளையும், வேதனைகளையும் நிறைந்த சமூகமாக எமது தமிழ் சமூகம் வாழ்ந்து வந்தது. என்பதை நாங்கள் மறந்து விடமுடியாது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை (11) மட்டக்களப்பு-பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த பரிசழிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் பெரியகல்லாறு கலாசார மண்டப்பத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணைங்க சிறுபான்மை இன மக்களின் வாக்குப்பலம் அரசியல் மாற்றத்ததை செய்திருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேத்தலைப் பகிஸ்க்கரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாலும்கூட அதனையும் எதிர்த்து எமது தமிழ் மக்கள் இந்த முறை அரசியல் மாற்றத்திற்கு வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் உண்மை.

எமது கட்சி, மக்களின் முடிவோடு ஒன்று சேருகின்ற காரணத்தினால் மக்களின் கருத்துக்களை அறிந்து மக்கள் அரசியல் மாற்றம் தேவை என்பதை உணர்ந்துள்ளார்கள் என எமது தலைமைப்பிடத்திற்கு நாம் அறிவித்தோம். அதன் காரணமாக தலைமைப்பீடம் அரசியலை மாற்றம் செய்ய வேண்டுமாக இருந்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது.

ஒரு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்பர்கள் இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளயும், ஒதுக்கிவிட்டு இந்த தேர்தலில் தமிழ் சமூகம் ஆட்சிமாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பது நல்ல சந்தர்ப்பமாகும்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என ஒரு குழு எம்மைக் கேட்டிருந்தது. அதற்கிணங்க நாங்கள் அந்த தேத்தலைப் பகிஸ்கரித்தோம். அதன் பின்னர் கொடூர ஆட்சி வந்தது.

இம்முறையும்கூட ஆட்சிமாற்றம் ஏற்படாமல் இந்த தேத்தலை பகிஸ்க்கரிக்கச் சொல்லியிருந்தால் 2005 ஆம் ஆண்டு என்ன நடந்ததோ அது போன்று மூன்றாவது தடவையும் ஆட்சி மாற்றம் இல்லாமல் தவிருத்திருப்போம்.

புதிய ஜனாதிபதி இந்த தேத்தலில் வென்றது 5 லெட்சம் மேலதிக வாக்குகளால் மட்டுமே! நாங்கள் தேத்தலைப் பகிஸ்கரித்திருந்தால் மீண்டும் ஒருமுறை ராஜபக்ஸ இந்த நாட்டிலே கொடூர ஆட்சியினை மேற்கொண்டிருப்பார். அது நடைபெறவில்லை.

ஆட்சி மாற்றத்திற்குக்  காரணம் இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை இனம் என்பதை ஒருபோதும் மறந்து விடமுடியாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவரது பதவிக்காலம் முடிந்து அம்பாந்தோட்டைக்குச் சென்றபோது அந்த மக்களிடம் அவர் கூறியிருப்பதானது. சிங்கள மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை வடகிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் மக்களும், மலையகத்திலே வாக்கின்ற சிறுபான்மைத் தமிழினமும் தான் என்னைத் தோற்கடித்துள்ளார்கள். சிங்கள மக்கள் என்னைத் தோற்கடிக்க வில்லை. என்ற இன முரண்பாட்டுக் கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

கடந்த காலங்களிலும், மஹிந்த ராஜபக்கச இனமுரண்பாட்டுக் கருத்துக்களைத் தோற்றுவித்து வந்தார் சிங்கள மக்களை தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறிக் குடியேற்றினார். காணிகளைக் கபளீகரம் செய்தார்.

தற்போது புதிய அரசாங்கம் நாடாளுமன்றிலே பெரும்பான்மையை பெறமுடியாத நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும் ஜனாதிபதிக்கு இருக்கின்ற சில அதிகாரங்கள் கட்டுப்படுத்துவதற்கு இருக்கின்ற போதிலும், நாடாளுமன்ற சில நடைமுறைகள் அவற்றுக்கு ஒத்துவராமல் சிலேவேளைகளில் இருக்கலாம். எனவே இன்னும் சில நாட்களில் என்ன மாற்றங்கள் நடைபெறப் போகின்றது என்பதை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிறுபான்மை இனம் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேரிவு செய்திருக்கின்றது. ஆனால் தனியே சிறுபான்மை இனை மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு. இந்த நாட்டை ஒரு ஜனாதிபதியை உருவாக்கிவிட முடியாது என்பது உண்மை.  ஆனால் சிறுபான்மை இனத்தின் வாக்குகள் இல்லாமல் இந்த நாட்டிலே ஒரு அரசியல் தலைமையை ஏற்படுத்த முடியாது என்பதற்கு நடைபெற்று முடிந்த தேத்தல் எடுத்துக் காட்டியிருக்கின்றது.

சிறுபான்மையின மக்கள் குறிப்பாக எமது தமிழ் மக்கள்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள். மஹிந்த அரசு மழை வெள்ளம் வந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி பாய்களையும். வெட்சீற்களையும் அள்ளி, அள்ளி வழங்கினார்கள். ஆனால் மக்கள் அனைத்தினையும் வாங்கிவிட்டு எமது மக்கள் வாக்களித்தது மைத்தரிபால சிறிசேனவுக்குத்தான்.

சோற்றுக்காகவும் வெற்சீட், பாய்களுக்காகவும், தமிழன் விலைபோக மாட்டான் உண்மையை உணர்ந்து வாக்கழிப்பவன்தான் தமிழன் என்பதை கடந்த தேத்தரில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்..

மஹிந்த அரசிலிருந்த முலிம் அமைச்சர்கள் அவர்களது அமைச்சுப் பதவிகளை துறந்துவிட்டு அவர்களுடைய சமூகத்திற்காக மைத்திரி பக்கம் வந்தார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்ற  தமிழ் அரசியல்வாதிகள் மாறவில்லை. இதுபற்றி நமது தமிழ் மக்கள் சிந்தித்திப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு எமது சமூத்தினைப் பற்றிய சிந்தனை ஒபோதும் கிடையாது.

தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கின்றார். எமக்கும் அழைப்பி வந்திருக்கின்றது. நாங்கள் அமைச்சுப் பதவிக்கு மட்டும் அரசாங்கத்தை நாடுவதில்லை எமது இலக்குகள் வேறாக இருக்கின்றன. கடந்த கால போரிலே ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் இன்றும் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள் அயிரக்கணக்கான நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன, அவைகள் திருப்பித்தர வேண்டும். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்.
இன்று நாட்டிற்கு நல்ல ஜனாதிபதி கிடைத்திருக்கின்றார். தற்போதைய அரசில் ஒரு அமைச்சு பெற்றால் ராஜபக்ஸ அரசாங்கதில்  10 அமைச்சுக்களைப் பெற்றிருக்கலாம். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிக்குப் பின்னால் போவர்கள் அல்ல.

தமிழ் மக்களின் குறைகள் தீர்க்கப்படல் வேண்டும், தமிழ் மக்களின் தேவைகள் நீக்கப்படல் வேண்டும் எமது மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படல் வேண்டும். இதற்கு முன்னோடியாக நடைபெற்றால்தான் ஏனையவைகள் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய வாய்ப்பு ஏற்படும். அதுவரைக்கும் தொடர்ந்து எமது நிலமைகளை எடுத்துக் கூறி புதிய ஜனாதிபதியிடமிருந்து நிவாரங்கள் பெற்றுவிட்டுத்தான் பின்வரும் செயற்பாடுகள் பற்றி நாங்கள் சிந்திப்போம். அதுவரைக்கும் நாங்கள் பதவிக்காக ஆசைப்படுபவர்கள் அல்ல.

நாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால் கருணா அம்மானுக்குக் கிடைத்தது அரை மத்திரிப் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனையே முழு மந்திரிப் பதவி எடுத்திருக்கலாம். அதனை நாங்கள் செய்யவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றோம். இந்த நாட்டுப் பிரச்சனையை உலகறியச் செய்ததும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மூன்றாவது தடவையாகவும் எமது பிரச்சனை பற்றிக் கதைப்பதற்கு கொண்டு சென்றதும், இந்த தமிழ் தேசிய்க கூட்டமைப்புத்தான். இதனை எமது தமிழ் மக்கள் மறக்க வில்லை. என அவர் மேலும் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: