
சிறுவர்கள் முதற்கொண்டு வயோதிபர்கள் வரையில் இந்த வீதி விபத்துக்களில் சிக்குண்டு பரிதாபகரமாக பலியாகும் சம்பவங்கள் நாளாந்தம்; இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சாரதிகளின் கவனயீனம் காராணமாக இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் தாம் கைது செய்யப் படுவதிலிருந்து அல்லது நீதி விசாரணைகளுக்கு உட்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள சாரதிகள் சில குறுக்கு வழிகளைக் கையாள்வதாகவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
சாரதிகள் முறையாக பயிற்சி பெற்று சாரதி அனுமதிப் பதிரங்கள் பெறுகின்றார்களா? உரிய இடத்தில் சரியான முறையில் மருத்துவச் சான்றிதழ் பெறுகின்றார்களா? வீதி ஒழுங்குகளை, சமிக்ஞைகளை முறையாகக் பின்பற்றுகின்றார்களா? என பல கேள்விகள் பொது மக்கள் தரப்பில் எழுப்ப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க வீதிகளில் உரிய இடங்களில் வீதிச் சமிக்ஞைகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளனவா? வீதித்தடைகள் போடப்பட்டுள்ளனவா? மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு எற்றவாறு வீதிகள் செப்பனிடப் பட்டுள்ளனவா? எனவும் பலர் வினா எழுப்புகின்றனர்.
இவற்றினைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதற்கு கட்டாக்காலி மாடுகள், ஆடுகள், மற்றும் வளர்ப்பு நாய்கள் போன்றவை வீதிகளில் அலைந்து திரிவதாலும், வீதிவிபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் கூடுதலாக அமைந்துவிடுகின்றன.
இரவு வேளைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு ஏற்ற வகையில் வீதி விளக்குகள் இல்லை என சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர். இவை மாவட்டத்தின் பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
சாரதிகள் போட்டித்தன்மையில் வாகனங்களை அதி வேகத்தில் செலுத்தும் போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல விபத்துக்கள் பதிவாகின்றன.
கடந்த யுத்த காலங்களில் மட்டக்களப்பு மாவடத்திலுள்ள பலர் அந்த யுத்த வடுக்களைச் சுமந்த வண்ணம் அங்கவீனர்களாகவும், வலது குறைந்தவர்களாகவும், காணப்படுகின்றனர், ஆனாலும் தற்போதைய சமாதான சூழல் என்று அழைக்கப்படும் இவ்வேளையிலும் மாவட்டத்தின் நாலா பக்கமும் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களாலும் நிரந்தர அங்கவீனத்திற்குள்ளாவதனையும் அறிய முடிகின்றது
இப்படிப்பட்ட சம்பவங்களைக் குறைப்பதற்கு மாவட்டம் தழுவிய ரீதியில் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகின்றன.
மாதாந்தம் அல்லது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வீதி நடைமுறைகள் பற்றி ஆலோசனைகள் கூறவேண்டும்.
குற்றமிழைக்கப்படும் சாரதிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குவதோடு, மட்டுமல்லாமல் காலத்திற்கு காலம் அவர்களின் நடத்தைகள் பற்றியும் நன்கு அவதானிப்பில் ஈடுபடல் வேண்டும்.
அத்தோடு சாரதிகள் மாத்திரமின்றி பொதுமக்களுக்கும் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நிகழ்வுகளை, முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தகுதியானவர்களுக்கு மாத்திரம் சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்குதல், விபத்துக்கள் நிகழ்வதற்கு காரணமாய் அமைந்தவர்களுக்கு பக்கச்சார்பற்ற தண்டனைகள் வழங்க வேண்டும்.
இப்படிப்பட்ட சம்பவங்களைக் குறைப்பதற்கு மாவட்டம் தழுவிய ரீதியில் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகின்றன.
மாதாந்தம் அல்லது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வீதி நடைமுறைகள் பற்றி ஆலோசனைகள் கூறவேண்டும்.
குற்றமிழைக்கப்படும் சாரதிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குவதோடு, மட்டுமல்லாமல் காலத்திற்கு காலம் அவர்களின் நடத்தைகள் பற்றியும் நன்கு அவதானிப்பில் ஈடுபடல் வேண்டும்.
அத்தோடு சாரதிகள் மாத்திரமின்றி பொதுமக்களுக்கும் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நிகழ்வுகளை, முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தகுதியானவர்களுக்கு மாத்திரம் சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்குதல், விபத்துக்கள் நிகழ்வதற்கு காரணமாய் அமைந்தவர்களுக்கு பக்கச்சார்பற்ற தண்டனைகள் வழங்க வேண்டும்.
உரிய இடங்களில் முறையான வீதிச் சமிக்கைகள், வீதித்தடைகள் இடப்பட்டிருத்தல் வேண்டும், என்ற விடையங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மட்டக்களப்பு மாட்டத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு உரிய பூர்வாங்க செயற்றிட்டம் உருவாக்கப்பட வில்லையாயின் எதிர் காலத்தில் இன்னும் பாரிய இழப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும்.
கடந்த காலங்களைப் போலல்லாமல் வீதிகள் கார்பெட் இடப்பட்ட பின்னர் கல்முனை-திருகோணமலை வீதி மற்றும் மட்டக்களப்பு கொழும்பு – நெடுஞ்சாலை மற்றும் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வீரமுனை –மட்டக்களப்பு பிரதான வீதி போன்ற இவ்வாறான கார்பட் வீதிகளிலேயே அதிகளவு விபத்துக்கள் பதிவாகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்திய களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மாத்திரம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து யூலை மாதம் வரையில் 176 விபத்துக்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன.
தற்போதைய சமூத்தை தேக ஆரோக்கியத்துடன் அங்கவீனர்களின்றி உருவாக்குமிடத்தில்தான் எதிர் காலத்தில் உள்ள குழந்தைகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும் எடுத்துக் காட்டாய் அமையும்.
எனவே மட்டக்களப்பு மக்களின் மனங்களில் பதிவாகின்ற வீதி விபத்துக்களை இல்லாதொழிக்க துறை சார்ந்தோர் துரிதகதியில் செயற்பட்டு பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதையே பலரும் எதிர் பார்க்கின்றனர்.
நாளாந்தம்; விடியற் காலையில் எழும் ஒவ்வொருவரும் அன்றய நாள் நன்நாளாக அமைய வேண்டும் என்பதையே! பிராத்தனை செய்து கொள்கின்றதனையும் நாம் அவதானிக்க முடிகின்றது.
இருந்த போதிலும் தற்போதைய கடுகதி உலகில் பலரும் பரபரப்புடன் செயற்படுகின்றனர். அதற்கேற்றாற்போல் இயந்திரங்களும் மின்சாதனங்களும் பல்கிப் பெருகிவருகின்றன.
இவ்வாறு மனிதனின் துரித செயற்பாடுகளுக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி மேலோங்கி நிற்கின்றது. இவ்வாறுதான் மட்டக்களப்பு மாவட்டமும் துரிதவளர்ச்சிப் பாதையினை நோக்கிச் செல்வதாக பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் வீதி விபத்துக்களால் ஏற்படும் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்றாக ஆகி விடுகின்றது.
இவற்றைத் தவிர்க்க எல்லோரும் ஒருமித்துப் பணியாற்றுவோம்.
(எஸ்.ஜதுர்சயன்)
0 Comments:
Post a Comment