12 Dec 2014

மட்டு நகரில் நல்லாட்சி திட்டத்தின் கீழ் கணணிகள் வழங்கி வைப்பு!

SHARE
 மட்டக்களப்பு மாவட்டத்தில் E -Governance  திட்டத்தை மேம்படுத்துவதற்கும், மாவட்டத்தின் 5 வருட அபிவிருத்தித் திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலும் 30 கணணித் தொகுதிகளை EU - SDDP  திட்டத்தின் முதல் நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம் ( UNDP - யூ.என்.டி.பி) வழங்கியுள்ளது.
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுடைய அனுமதியுடன் இந்தக் கணணித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கணணிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (11) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

E - Governance  திட்டத்தினை வலுப்படுத்தவதன் மூலம் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களினுடைய தகவல்களையும் விரைவாகப் பெற்றுக் கொள்ளமுடியும், அதே நேரம் மாவட்டத்தின் அபிவிருத்தித்திட்டங்களையும் விரைவு படுத்த முடியும் என்ற வகையிலும் இத் திட்டம் அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியிருப்பாளர் விபரத்திரட்டு செயற்பாடுகளுக்கும் இக் கணணிகள் பயன்படுத்தப்படும் என்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார். அந்த வகையில், இன்று மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களுக்கும் இரண்டு தொகுதிகள் வீதமும், மாவட்ட செயலகத்திட்டமிடல் பிரிவுக்கு இரண்டுமாக 30 கணணித் தொகுதிகள் விநியோகிக்கப்பட்டன.

இன்று, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் ஆகியோர் இந்தக் கணணிகளை வழங்கி வைத்தனர்.அத்துடன், பிரதேச செயலாளர்கள், உதவி, பிரதித்திட்டமிடல் பளிப்பாளர்களும் யூ.என்.டி.பி யின் மாவட்ட திட்ட இணைப்பாளர் கே.பார்த்தீபனும் கலந்து கொண்டனர்.(nl)


SHARE

Author: verified_user

0 Comments: