தொடர்ச்சியாக சில நாட்களாக பெய்துவருகின்ற மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பண்டாரியாவெளி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிற்குள்ளும், வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேறி அயல் கிராமமான அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.இந்த மக்களை பட்டிப்பளை பிரதேச செயலகத்தினரும், கொக்கட்டிச்சோலை பிரதேச சபையினரும், கிராம அபிவிருத்தி சம்மேளனமும், இராணுவத்தினரும், வேள்ட்விஸன் நிறுவனமும் இணைந்து பாதுகாப்பான முறையில் கிராமத்திலிருந்து நேற்று மாலை வெளியேற்றினர்.
அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பண்டாரியாவெளி கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த 200 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.



.jpg)






0 Comments:
Post a Comment