20 Dec 2014

மூதூரில் விபத்து சிறுவன் பலி

SHARE
நாவலடிகாமிலா-

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு –ஆரையம்பதி நோக்கி வந்த தனியார் பேரூந்து ஒன்று இன்று சனிக் கிழமை மாலை 6.30 மணியளவில் மூதூரில் வைத்து விபத்துக்குள்ளாகியதில்  6 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதுடன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது…

ஆரையம்பதியிலிருந்து திருகோணமலைக்குச்  சுற்றுலாவுக்காகச் சென்று விட்டு ஆரையம்பதி நோக்கி திரும்பி வரும் வழியில் மூதூர் அன்சில் ஹொட்டலுக்கு முன்பாக உள்ள மரம் ஒன்றில் இப்பேரூந்து மோதியுள்ளது.

இதன்போது உயிரிழந்த சிறுவனையும், படுகாயமடைந்த சாரதியையும் மூதூர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: