14 Dec 2014

எங்கள் உரிமைகளைத் தேடி - ஊர்வலம்

SHARE
திருகோணமலை மனித உரிமைக்கும்  அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் 'எங்கள் உரிமைகளைத் தேடி' என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று(14) காலை நடத்தப்பட்டது.

பெரியகடை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. ஆராதனையைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.  வண. சட்டத்தரணி சி.யோகேஸ்வரன்,  மலைமுரசு ஆசிரியர் ஞானசேகரன், சட்டத்தரணி இரா.திருக்குமரநாதன் போன்றோரும் இந்த ஊர்வலத்தில கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: