15 Dec 2014

இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது,வணிகம்

SHARE
அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 58 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர்  11 அன்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் காவல் துறை உயர் அதிகாரி ஷிராஸ் நசீர் கூறும்போது, “கைது செய்யப்பட்ட மீனவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் பயன்படுத்திய 11 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.

இதேபோல கடந்த நவம்பர் மாதத்திலும் எல்லை மீறிய குற்றச்சாட்டின் பெயரில் 61 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது. அரபிக் கடலில் உள்ள சர்வதேச எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இருதரப்பிலும் அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: