26 Dec 2014

மட்டக்களப்பு மாவட்டதில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான இன்று வரையுள்ள அ.மு.நி. தகவல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டதில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது நிலையில் இன்றும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இன்றய வெள்ள அனர்த்த பாதிப்பு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்று (26) முன்னர் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 341  கிராம சேவையாளர் பிரிவுகளில்,  136949 குடும்பங்களைச் சேர்ந்த 488628 நபர்கள் பாதிக்கப்  பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் மாவட்டத்தில் 6643 குடும்பங்களைச் சேர்ந்த 22293 நபர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மாவட்டத்தின் ஆங்காங்கே காணப்படுகின்ற பொதுக்கட்டிடங்களிலும், பாடசாலைகளிலும், 79 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

இவற்றினைவிட 60142 குடும்பங்களைச் சேர்ந்த 214376  நபர்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவகின்றன.

54213 குடும்பங்களைச் சேர்ந்த 134144 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளதாக மேற்படி மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ள இந்நிலையில்

தற்போதைய வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3921 வீடுகள் முழு அளவிலும், 7698 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: