15 Dec 2014

பொருளாதாரத் துறையில் இணைந்து சேவையாற்ற பாகிஸ்தான் சீனா இணக்கம்,வணிகம்

SHARE
பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையில் இணைந்து சேவையாற்ற பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஷார் அலி கானுடன் சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கோ ஷென்ங்குன் நடத்திய உரையாடலின் போதே இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை தலைவருமான சௌத்ரி நிஷார் அலி கானின் அழைப்பின் பேரில் சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சரும் அரச சபை உறுப்பினருமான கோ ஷென்ங்குன் கடந்த 5 ஆம் திகதி  பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட போதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இடம்பெற்ற மூன்று நாள் விஜயத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் கோ ஷென்ங்குன் பாகிஸ்தான் ஜனாதிபதி மன் மூன் ஹூசைன், மற்றும் பிரதமர் நவாஷ் ஷெரிப்பினை சந்தித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங், மற்றும் பிரதமர் லீ கொக்கியாங் சார்பில் வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவினை பாராட்டி கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார நட்புறவு எப்போதும் ஒன்றுபட்டே இணைந்திருக்கும். இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு தர இணக்கங்களை பேணி வந்துள்ளது.

இனிமேலும் இத்தகைய பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தல், போதை மருந்து கடத்தல் தொடர்பில் போராட்டம், எல்லை நிர்வாகம், மற்றும் சட்ட மூலம் வலுப்பூட்டல்,  ஆகிய பொருளாதார வர்த்தக திட்டங்களில் இணைந்து சேவையாற்ற தயாராகவுள்ளதாக இரு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: