கடந்த (13) அன்று கண்டி பல்லேகலையில் நடைபெற்ற
இங்கிலாந்து அணிக்கெதிரான 6 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே அவர் தனது
20 ஆவது ஒரு நாள் சதத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட்
போட்டிகளின் பின்னர் தாம் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு
பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார
நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து
அணிகளுக்கிடையே இடம் பெற்ற 6 வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின்
பின்னர் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை
குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்றைய போட்டியில் பெற்று கொண்ட 112 ஒட்டங்களுடன் குமார் சங்கக்கார 20 சதங்களை பெற்ற வீரராக திகழ்கிறார்.
இதுதவிர, ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் 91 அரை சதங்களை பெற்ற வீரர் என்பதும் குறிப்பிடதக்கது.
இதனிடையே, இலங்கை மற்றும் இங்கிலாந்து
அணிகளுக்கிடையே இடம் பெற்ற 6 வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில்
இலங்கை அணி 90 ஒட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(nl)
0 Comments:
Post a Comment