பாகிஸ்தான் -
ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்களை
அதிகரிக்கும் வகையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் - ஈரான் கூட்டு பொருளாதார
ஆணைக்குழுவின் 19 ஆவது அமர்வு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 09 அன்று இடம்பெற்றது. அவ் அமர்வின் முடிவின் போதே பாகிஸ்தான் பிரதமர் நவாஷ்
ஷெரிப் மற்றும் ஈரான் பொருளாதார நிதித்துறை அமைச்சர் கலாநிதி அலி ரயேப்னிய
இவ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
முதலீடு, பொருளாதாரம், தொழில்நுட்ப உதவி, சிறிய நடுத்தர பாரிய வர்த்தக முயற்சிகள், துறைமுகம், கைவினை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் தமது வர்த்தக பொருளாதாரங்களை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பொருளாதார தொழில் துறைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டே இவ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பரஸ்பர முதலீடு மற்றும் இரு நாட்டு வர்த்தக முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஈரான் உயர் தலைவர் அயரொல்கா அலி கமெனெனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.(nl)

0 Comments:
Post a Comment