15 Dec 2014

கடற்படை முகாம் வாபஸ்; மு.கா.வின் நீண்ட கால கோரிக்கை வெற்றி

SHARE
ஒலுவிலில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படை முகாம் சனிக்கிழமை (13) முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக சேதமுற்றிருந்த, ஒலுவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்நிருந்த அல் ஜாயிஸா வித்தியாலய கட்டத்தில் இக்கடற்படை முகாம் இயங்கி வந்தது.

ஒலுவில் அல் ஜாயிஸா வித்தியாலயம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து இவ்விடத்தில் திடீரென கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்களும் மீனவர்களும் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்ததுடன் இக்கடற்படை முகாமை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அக்கோரிக்கைகள் கடற்படையினரால் நிராகரிக்கப்பட்டு வந்தமை கறிப்பிடத்தக்கது.

இக் கடற்படை முகாமை அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பல தடைவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும், பாதுகாப்புக் காரணங்களை தெரிவித்து அது அகற்றப்படவில்லை. ஆனால், தற்போது இக்கடற்படை முகாம் விசேட உத்தரவுக்கமைய முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பாதுகாப்ப அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்குமிடையிலான சந்திப்பின் அடிப்படையிலேயே இம்முகாம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கடற்படை முகாம் அகற்றப்பட்டதையிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: