கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2014 நிகழ்வுகள் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் தலைமையில் (14.12.2014) அன்று பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, கலாசார, காணி, போக்குவரத்து அபிவிருத்தி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் கொளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, வைத்தியதுறை மற்றும் சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரனும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமூகசேவைகள், கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் சிங்கள, தமிழ், முஸ்லிம் என பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதுடன் இவர்களது கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இதில் பங்குபற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் வருகைதந்த அனைவருக்கும் விசேட நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ், சிங்கள மொழியில் யு.எல்.எம்.பயிசர் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
0 Comments:
Post a Comment