மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம,
தர்மபுரம்; கடலில் நீராடிக்கொண்டிந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன
கந்தசாமி ஜெயரூபன் (வயது 19) என்ற இளைஞரின் சடலம் திங்கட்கிழமை (15) காலை
மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை (14) முற்பகல் கடலில் நீராடிக்கொண்டிருந்தனர். இவர்கள் நீரில் மூழ்கியபோது இவர்களில் ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் காப்பாற்றினர்.
இந்த நிலையிலேயே இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், இவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு காப்பாற்றப்பட்ட இளைஞர்களில் இருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
0 Comments:
Post a Comment