16 Nov 2014

இலங்கையிலே இருக்கின்ற கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும் - பிரதியமைச்சர் வி.முரளிதரன்

SHARE
கல்வியை மென்மேலும் வளர்க்க வேண்டுமாக இருந்தால் எமது மக்கள் அரசியைலையும் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
இலங்கையிலே தெரிவு செய்யப்பட்டுள்ள 200 விஞ்ஞான தொழில் நுட்ப பாடாலைகளிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 8 பாடசாலைகள்  விஞ்ஞான தொழில் நுட்ப பாடசாலையாகத் தெரிவு செய்யப் பட்டுள்ளன.


இலங்கையிலே இருக்கின்ற கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும். ஏனெனில் கலை, வர்த்தகம், போன்ற துறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து தொழில் நுட்பத்தில் மாணர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

மீழ் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை (16) மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைiமில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை திதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகiளிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்தா அவர்……

கல்வியை அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து வளர்க்க வேண்டியுள்ளது. என்னுடைய நோக்கமும் அதுதான் நமது மாணவர்களின் பெறுபேற்றை வருடா வருடம் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆகும். அதற்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற கல்விமான்களுடன் சேர்ந்து நான் உழைத்துக் கொண்டிருக்கின்றேன்.


பட்டிருப்புக் கல்வி வலயத்தில் இவ்வருடம் 5 ஆம் அண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 108 மாணவர்கள் சித்தி பெற்றிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் யுத்த சூழல் காணமாக படுவான்கரைப் பிரதேசம் வெகுவாகப் பாதிக்கபட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து கடந்த 8 வருடங்களாக அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவரும் எடுத்த முயற்சியின் பலனாக தற்போது மட்டக்களப்பு மவாட்டத்தில் கல்வி வளர்ச்சி முன்னேறமடைந்து கொண்டு வருகின்றது.


5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மவட்டத்திலுள்ள  கல்குடா கல்வி வலயத்தில் 56 மாவணவர்களும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 240 மாணவர்களும், மட்டக்கள்பபு மத்தி கல்வி வலயத்தில் 378 மாணவர்களும், சித்தி பெற்றிருக்கின்றார்கள் இந்த பெறுபேறுகள் கடந்த வருடத்தை விட முன்நேற்றமடைந்து காணப்படுகின்றது. இந்த வளர்ச்சி மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும். 


அரசாங்கதினால் கல்வியினை வளர்க்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப் தொழில் நுட்ப பாடசாலை, நனசலத்திட்டம், ஆயிரம் பாடசாலைத் திட்டம், ஐந்தாயிரம் பாடசாலைத திட்டம், போன்ற பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.


நனசலத்திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஒரு பாடசாலைக்கு 40 லெட்சம் ரூபாய் வீதம் செலவில் கட்டடமும் கணணிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


இலங்கையிலே தெரிவு செய்யப்பட்டுள்ள 200 விஞ்ஞான தொழில் நுட்ப பாடாலைகளிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 8 பாடசாலைகள்  விஞ்ஞான தொழில் நுட்ப பாடசாலையாகத் தெரிவு செய்யப் பட்டுள்ளன.


இலங்கையிலே இருக்கின்ற கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும். ஏனெனில் கலை, வர்த்தகம், போன்ற துறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து தொழில் நுட்பத்தில் மாணர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.


ஒரு நாட்டில் தொழில் நுட்படம் வளரும்போதுதான் பல மாற்றங்கள் வரும்  தற்போது வளர்ந்துள்ள நனோ தெழில் நுட்பட் உலகத்தில பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இலங்கையில் நனோ தொழில் நுட்பம் விருத்தியடையவில்லை அதற்காகா வேண்டி மொறட்டுவ பல்கலைக் கழகம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வகின்றது. மேலும் நனோ தொழில் நுட்பத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காத்தான் அரசாங்கமும் பாடசாலைகளில் விஞ்ஞான தொழில் நுட்ப பாடசாலை என்பதையும் அறிமுகப் படுத்தியுள்ளது. இவ்வாறு எமது பகுதி மாணவர்களையும், பல ஆரய்சிசிகளில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் எமது மாணவர்களும் புதிய புதிய செயற்பாடுகளையும், கண்டுபிடிப்புக்களையும் மேற்கொள்வார்கள்.


இவைகள் அனைத்தினையும் மென்மேலும் வளர்க்க வேண்டுமாக இருந்தால் எமது மக்கள் அரசியைலையும் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அரசியலை எமது குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.  எனவே வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய ஜனாதிபதிக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே இந்த விடையத்தில் மட்டக்களப்பு மவாட்டத்தில் உள்ள கல்வி மாண்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க, கிழக்குமாகாணண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.சிஷாம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்,   களுவாஞ்சிகுடி பிததேச உதவிப் பொலிஸ் அதியடம்சகர் ஆர்.ஏ.எம்,ஆஜே.இரத்நாயக்க, உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி கல்வி அதிகாரிகள், உட்பட பல் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  பாடசாலைகளில் மாகாண மட்டம், தேசிய மட்டம் போன்றவற்றில் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கும், சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்களுக்கும் ஞாபகச் சின்னங்களும். கேடையங்களும் வழங்கப் பட்டமை குறிப்பிடத் தக்தாகும்.
























SHARE

Author: verified_user

0 Comments: