குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள
பரிபார மூர்த்திகளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரதிச்சி பெற்ற ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள பரிபார மூர்த்திகளுக்கான எண்ணைக்காப்பு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
திங்கட்கிழமை(14.07.2025) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி செவ்வாய்கிழமை(15.07.225)எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிவார மூர்த்திகளான சிவன், மதக்வாகனம், விஷ்ணு, நவக்கிரகம், ஆகிய தெய்வங்களுக்கு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை(16.07.2025) காலை 10.31 மணிக்கு புண்ணிய சுபமூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலய கிரியை நிகழ்வுகள் ஆலயம் பிரதம குரு சிவ ஸ்ரீ நவரத்ன முரசொலி மாறன் குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment