13 Nov 2014

கிழக்குமாகாண சபைஉறுப்பினர் த.கலையரசனின் முயற்சியால் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்கு

SHARE

(சா.நடனசபேசன்)


2014 ஆண்டு சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நாவிதன்வெளிப் பிரதேச மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசனின் முயற்சியினால் 15 ஆம் கிராமம் உதயதீபம் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும் ஜேர்மன் நாட்டின் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதி உதவியில் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் 13 ஆம் திகதி வியாழக்கிழமை அமைப்பின் தலைவர் தயாநிதி தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது

இதில் நாவிதன்வெளிப் பகுதியில் உள்ள 10 பாடசாகைளில் கல்வி பயிலும் சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டனர்
இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் விவேகானந்த வித்தியாலய அதிபர் கே.பேரானந்தம் ஆசிரிய ஆலோசகர் எம்.வி.எம்.!சுப் உதய தீபம் அமைப்பின் ஆலோசகர் ஜெகதீசன் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் சங்கரலிங்கம் றாணமடு இந்து மகாவித்தியாலய பிரதி அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்







SHARE

Author: verified_user

0 Comments: