அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட சட்ட விரோத கோல்ட் சீல் ரக
சிகரட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்
ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய
எச்.எம்.எம். பசீல் ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் (19) அக்கரைப்பற்றுப் பொலிஸார்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய
எச்.எம்.எம். பசீல் முன்னிலையில் இன்று (20) வியாழக்கிழமை ஆஜர் செய்தபோதே
ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
0 Comments:
Post a Comment