கல்முனை மாநகர சுற்றாடலை பசுமையாக மாற்றியமைக்கும் திட்டம் தொடர்பிலான
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஜேர்மன் பேர்கன்பெல் ஐபாஸ்
பல்கலைக்கழகத்துடன் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம்
காரியப்பர் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜேர்மன் பேர்கன்பெல் ஐபாஸ் (Birkenfel IFAS) பல்கலைக்கழகத்தில் நேற்று
புதன்கிழமை “சுற்றாடலை பசுமையாக வைத்திருத்துக் கொள்வதும் அதனை பொருளாதார
வளமாக பாவிக்கும் முறைமையும்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு ஒன்று
நடைபெற்றது.
இம்மாநாட்டில் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரும்
பங்கேற்றிருந்தார். ஜேர்மன் நாட்டின் பொருளாதார, மின் சக்தி, மின் வலு
அமைச்சர் எவர்லைன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஜேர்மனுக்கான
இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும்
தூதுவர்களும் ராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டின் ஓர் அங்கமாக கல்முனை மாநகர சுற்றாடலை பசுமையாக
மாற்றியமைக்கும் திட்டம் தொடர்பிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment