19 Nov 2014

நிதி நிபுணத்துவம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் விழிப்புணர்வு.

SHARE

நிதி நிபுணத்துவம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று புதன்கிழமை (19) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இலங்கை வங்கியில் நடைபெற்றது.


இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதநிதிகள், மற்றும் இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்கள். என 70 இற்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.


இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு குறுங்கால கடன் திட்ட தலைமை அதிகாரி ஆர்.சிறிபத்மநாதன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.


மேலும் இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் மாட்டீன் சிந்தியா, இலங்கை வங்கியின் களுவாஞ்சிகுடி முகாமையாளர் கே.ரெட்ணகுமார் உட்பட வங்கி உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த விளக்கமளிப்பு நிகழ்வில் வங்கி வாடிக்கையாளர்கள் எவ்வாறு வங்கியில் நடந்து கொள்ள வேண்டும், முறைசாரா நிதி நிறுவனங்கள் தொடர்பாக மக்கள் எவ்வாறு விழிப்புடன் நடந்து கொள்ளுதல், கள்ள நோட்டுக்களை எவ்வாறு அடையாளம் காணுதல் தொடர்பாகவும்,


இலங்கை வங்கியில் மக்களுக்காக வேண்டி நடைமுறைப் படுத்தியுள்ள, விவசாயக் கடன், வாழ்வாதாரக் கடன், மற்றும் வறுமை ஒழிப்புக்கடன் உட்பட ஏனைய இதர சேவைகள் தொடர்பாகவும் விளக்களிக்கப்பட்டதாக இலங்கை வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையின் வறுமை ஒழிப்பு குறுங்கால கடன் திட்ட வெளிக்கள் அதிகாரி என்.வி.வாசன் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: