21 Nov 2014

தமிழ் மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஸதான் ஜனாதிபதி

SHARE
தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது, மீண்டும் மஹிந்த ராஜபக்ஸதான் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரப்போகின்றார். இதுதான் உண்மை. தமிழ் மக்களுக்கு அதிகளவு பிரச்சனைகள் இருக்கின்றது உண்மைதான் என்பதை நான் அறிகு அறிந்துள்ளேன்.


நான் ஒரு உண்மையினைக் கூறுகின்றேன் தமிழ் மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும்சரி  எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சதான் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் இதுதான் உண்மையும், சத்தியமுமாகும்.


என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஏற்பாடு செய்திருந்த ஜந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை (20) மாலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட  பாடசாலைகளிலிருந்து இம்முறை ஐந்தாம் ஆண்டு புரமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 107 மாணவர்களுக்கு கொப்பி, புத்தகப்பை, கொம்பாஸ் போன்ற பொருட்கள் அடங்கிய தலா 1500 ரூபாய் பெறுமதியான பொதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


களூவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அவர்…..


எனது அமைச்சின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு யாராவது உதவி புரிந்தால் அதற்கு நானும் நன்றிக் கட்பாடுடையவனாவேன்  எமது பிள்ளைகளின் எதிர் காலம் கல்வியில்தான் தங்கியுள்ளது. எமது அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி, உணவு, சப்பாத்து, கொப்பி, புத்தகம், சீருடை என அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகின்றது.


கிழக்கு மாகணத்தில் 1200 பாடசாலைகள் உள்ளன 4 லெட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். 20000 ஆசிரியர்கள் உள்ளார்கள் கடந்த வருடம் மாத்திரம் கிழக்கு மாகாணத்தில் 7000 ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். 


கடந்த 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்வியில் 9வது இடத்தில் இருந்தது ஆனால் கடந்த வருடம் கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் 5 வது இடமும் கல்வி பொதுத்தர உயர்தரத்திலே 3 வது இடத்தினையும் பெற்றுள்ளது.


வடக்கிலே கடந்த காலங்களில் மாணவர்களின் கைகளிலே துவக்குகள்தான் இருந்துள்ளன ஆனால் தற்போது அவர்கள் பென் கையில் எடுத்துள்ளார்கள் அதனால் அங்குள்ள மாணவர்கள் மிகவும் சிறப்பாக கல்வி கற்று இலங்கையிலே முதலிடம் பெறுகின்றார்கள்.



கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 வருடங்களாக முதலமைச்சர் பதவியில் மட்டக்கப்பைச் சேர்ந்த தமிழர் ஒருவர்தான் இருந்தார். ஆனால் தற்போது கிழக்கு மாகாணசiபியல் ஒரு தமிழ் அமைச்சர் கூட இலாமலுள்ளது.


கிழக்கில் 95 வீதமான பாடசாலைகள் மாகாண சபையின் நிருவாக்தின் கீழ் உள்ளன. அதபோல் 5 வைத்தியசாலைகளைத் தவிர ஏனை வைத்தியசாலைகள் அனைத்து மாகாணசபையின் கீழுள்ளது. இவை இவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி கிழக்கு மாகாணசபையில் ஒரு அமைச்சர்கூட இல்லமலுள்ளது. நான் மட்டும்தான் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி இருக்கும் ஒரே ஒரு அமைச்சர். ஏனைய நான்கு பேரும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களாகவுள்ளனர். என்னிடம் அதிகளவு தமிழ் பிள்ளைகள் தங்களுக்கு லேவர் வேலை பொற்றுத் தருமாறு விண்ணப்பங்கள் தந்துள்ளார்கள்.


தற்போது தமிழ் மக்கள் தண்ணீர், வீதி, மின்சாரம், வைத்தியசாலை போன்றன அமைத்துத் தரும்படி கேட்கின்றார்கள் ஆனால் வாக்குகளை மாத்திரம் எதிர் தரப்புக்குப் பேடுகின்றார்கள்.


தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. மீண்டும் மஹிந்த ராஜபக்ஸதான் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரப்போகின்றார். இதுதான் உண்மை. தமிழ் மக்களுக்கு அதிகளவு பிரச்சனைகள் இருக்கின்றது உண்மைதான் என்பதை நான் அறிந்துள்ளேன்.


நான் ஒரு உண்மையினைக் கூறுகின்றேன் தமிழ் மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும்சரி  எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சதான் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் இதுதான் உண்மையும், சத்தியமுமாகும்.


ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றிக் கதைப்பதற்கு யாருமில்லை ஆனால் முஸ்லிம் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் அவர்களது சமூகம் சார்ந்த அமைச்சர்கள் உள்ளார்கள். கிழக்கு மாகாணசபையிலோ நாடாளுமன்றதிலோ கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுதி எந்த விதமான தமிழ் அமைச்சர்களுமில்லை. இதனை கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இலவசமாக ஒரு சொட்டு நீர்கூட யாரும் தரமாட்டார்கள் அனைத்தையும் இந்த அரசாங்கம்தான் வழங்கிக் கொண்டு வருக்கின்றது.  எனவே என்னைப் பெறுத்த வரையில் நான் தமிழ். சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி சேவை செய்து வருகின்றேன் எனவே எதிர் காலத்தில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். என அவர் தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: