21 Nov 2014

பழையதை மீட்டிக் கொண்டிருப்பதை விட புதிய பாதைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுப்பதுதான் சாலச்சிறந்த்து. - வி.கே.ஜெகன்

SHARE
எமது பகுதி பெண்களது சமூக நலன் கருதிய சிந்தனைகள் தேவைகளை தட்டிக்கொடுத்து தூக்கிநிறுத்த எமது தேசத்தலைவர்கள் முன்வருவார்களானால் எமது பிரதேசத்தினதும் சமூகத்தினதும் வளர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வளர்ச்சியை எமது மாவட்டத்திலும் தூக்கி நிறுத்தவே இந்த மகளிர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுவருகின்றன – என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்)  தெரிவித்துள்ளார்.

வலி.தென்மேற்கு பகுதிக்கான மாதர் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வலிதென்மேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீவா தலைமையில் கட்சி அலுவலகத்தில் (20.11.2014) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். புதிதாக உதயமான மாதர் அமைப்பு உறுப்பினர் மத்தியில் தொடர்ந்தம் அவர் உரையாற்றுகையில் தெரிவித்த்தாவது 

விட்டுக் கொடுப்பும் தூர நோக்கமும் எமது இனத்திடமிருந்து அழிந்து விட்டது இதன் பிரதிபலிப்புக்கள் தான் தமிழர்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த வலிகழுக்கு காரணம் எனலாம்.

இனி வருங்காலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அனைத்து செயற்பாடுகளும் மக்கள் மத்தியிலுள்ளவர்களைக் கொண்டு துல்லியமாக வகையில் மேற்கொள்வனவாகத்தான் இருக்கும். இதுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நிண்டநாள் ஆசையாகவும் இருக்கின்றது. அவரது நோக்கங்களை நிறைவேற்ற இன்று உதயமாகியுள்ள நிங்களும் அவருடன் கைகோர்த்து எமது மக்களது தேவைகளை திறம்பட நிறைவேற்றிக்கொடுப்பதற்கு உழைக்க வேண்டும்.

நம்பிக்கை என்பதை கைவிடாது தொடர்ந்தும் முயற்சித்தால் நாம் இழந்தவற்றை விட அதிகமானவற்றை வென்றெடுத்து வாழ்வில் வெற்றியாளர்களாக பரிணமிக்கமுடியும்.

கடந்தகாலத்தில் யுத்த வடுக்களையும் வேதனைகளையும்  அதிகளவுபங்கை  சுமந்தவர்கள் எமது பெண்கள்தான். இத்தகைய பெண்களது மனங்களில் எதிர்கால வாழ்க்கையின் ஒளிக்கீற்றலைகளை பெற்றுக் கொடுப்பவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இருக்கின்றார். அவரது கரங்களில் அரசியல் அதிகாரம் கிடைக்கமானால் நிச்சயமாக தமிழ் மக்களது எதிர்காலம் பூரணமான நிலையை அடைந்துவிடும்.

கடந்த காலங்களில் நமக்குக் கிடைத்த அரசியல் தீர்வுகளையெல்லாம் உதாசீனம் செய்ததன் விழைவாகத்தான் இன்று வரை எந்தவொரு  நிரந்தர தீர்வையும் எட்ட முடியாத இனமாக இருக்கின்றோம். ஒவ்வொரு கணமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழ் மக்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. இந்த சுயநல அரசியலில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும். அவர்களது எதிர்காலத்தை சுயமாகச் சிந்தித்து மக்களது நலனுக்காக பாடுபடுபவர்களை தூக்கிநிறுத்துவதன் மூலம் தான் அரசியலில் நிரந்தர தீர்வைக்காண முடியும் என்பதோடு இதுவரை காலமும் கண்ட அவலங்களுக்கு முற்றுப் புள்ளியும் இடமுடியும்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போராட்டங்களை நடத்துவதற்கு மக்களை திரட்டுவதாக கூறுகின்றார்கள். நிச்சயமாகக் கூறுகின்றேன் அவர்கள் எந்த வழியில் போராடுகின்றார்களோ அவர்களது வழியிலேயே தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிராக போராடும் காலம் கனிந்துள்ளதாகவே தெரிகின்றது. மக்களுக்கு சேவைசெய்ய முடியாதவர்களிடம் அதிகாரங்களை இதுவரை நீங்கள் கொடுத்ததனால் தான் உச்சக்கட்ட அபிவிருத்திகளை எமது பகுதி காணமுடியாது இருக்கின்றது. தமிழ் மக்களது வாழ்வியலை மட்டும் மையமாகக் கொண்டு தமிழ் தேசியக்  கூட்டமைப்பினர் செயற்பட்டிருப்பார்களாயின் தமிழர்களுக்கு விடியற்காலம் என்றோ கிடைத்திருக்கும்.

பழையதை மீட்டிக் கொண்டிருப்பதை விட புதிய பாதைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுப்பதுதான் சாலச்சிறந்தது யுவதிகளே! நிச்சயமாக உங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்த மாட்டாது. உங்கள் ஒவ்வொருவரது நகர்வும் எமது மக்களது வாழ்வியலின் விடியலுக்கான அறுவடையாக இருக்க வேண்டும் என்பதுதான் எமது ஆசை.

எமது சுயஉரிமைகளை விட்டுக் கொடுத்து அரசுடன் ஒன்றிணைந்து இருக்கின்றோம் என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போல் நாமும் வெற்றுக்கோசங்களையும் போலி அரசியலையும் நடத்தியிருந்தால் குடாநாடு என்றோ சுடுகாடாகியிருக்கும். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த இணக்க அரசியல் என்ற அறிவாயுதத்தின் மூலம் தான் நெருப்பிலிருந்து மீண்ட இனமாக தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்றார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் ஜீவா மானிப்பாய் பகுதி இளைஞர் அணித்தலைவர் றொபின்சன் மற்றும் பொதுசபை உறுப்பினர்களுடன் 250ற்கு மேற்பட்ட மகளிரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.SHARE

Author: verified_user

0 Comments: