6 Nov 2014

அட்டாளைச்சேனை பிரதேசசெயலகத்துக்குதிவிநெகும திட்டத்துக்காக 6.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு

SHARE


அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசசெயலகத்துக்குட்பட்ட 'திவிநெகும' வாழ்வின் எழுச்சி பயனாளிகளில் தெரிவிவு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலினை மேம்படுத்தும் வகையில் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு புதன்கிழமை(05) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தலைமைப்பீட திவிநெகும முகாமையாளர் எம்.சிம்.எம்.தஸ்லீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், திவிநெகும கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், வங்கி முகாமையாளர் யூ.கே.நழீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சானது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் திவிநெகும திட்டத்துக்காக 6.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியொதுக்கீட்டின் மூலம் கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் முயற்சி, விவசாயம், மீன்பிடி, சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக தையல் தொழில் மற்றும் மீன்வியாபாரம் ஆகிய தொழில்துறைகளை மேற்கொண்டு வரும் 28 தொழில் முயற்சியாளர்களுக்கு தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள், மற்றும் உபகரணங்கள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: