6 Mar 2014

இ.செ.சங்கத்தின் மட்டக்களப்புக்கிளைத் தொண்டர்களுக்கு நீச்சல் பயிற்சி

SHARE
(கஜன்)
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை காரியாலயத்தினால் தொண்டர்களுக்கான அடிப்படை நீச்சல் பயிற்சி நெறியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டு 04அன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த 34 இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ள அனர்தத் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்டெடுத்தல், வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றும்போது கையாள வேண்டி அம்சங்கள் தொடர்பாக இதில் தொண்டர்கள் பயிற்றுவிக்கபட்டனர்.

இப்பயிற்சிநெறியினை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கம்பஹா மாவட்டக்கிளையின் நீரியல் பாதுகாப்பு அதிகாரி றஜீவ் கமகே அவர்கள் உள்ளிட்ட குழுவினர் இதில்; கலந்து கொண்டு தொண்டர்களுனக்கு பயிற்சிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு இறுதியில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும




















SHARE

Author: verified_user

0 Comments: