(வராதன்)
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் மட்டக்களப்பின் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அப்பகுதி மக்களின் வேண்டுகோளினைஏற்று அன்று கடந்த 13 அன்று விஜயம் செய்தார்.
இவ் வைத்தியசாலையில் காணப்படுகின்ற ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பாற்றாக்குறைக் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரின் கவனத்திற்கு வைத்தியசாலை அபிவிருத்திக்குழு எடுத்தியம்பியது.
மிக நீண்ட தொன்மை கொண்ட இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆளணிநிமயனம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இவ் விஜயத்தின் போது மாவட்டக்களப்பு பிராநதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைதிதியர் சதுர்முகம் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்உள்ளிட்டகுழுவினரும் கலந்துகொண்டனர்.
இவ்வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை நீக்குவதற்கு தான் முயற்சி எடுப்பதாக கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment