8 Feb 2014

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் போரதீவுப்பற்று பிரதேச சம்மேளனத்தின் இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும்

SHARE
(சக்தி)

தேசிய இளைஞர்  சேவை மன்றத்தின் போரதீவுப்பற்று பிரதேச சம்மேளனத்தின் இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும் இன்று சனிக்கிழமை (07)  போரதீவுப்பற்று பிரதேச செயலயத்தின் கேட்போர் கூடத்தில் நiபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் த.விந்தியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜே.ஆர்.கலாராணி, புதுக்குடியிருப்பு தொழிற் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.நடேசகுமார் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதேசத்திற்குரிய புதிய நிருவாகிகள் தெரிவு இதன்போது இடம் பெற்றது. தேசிய இளைஞர்  சேவை மன்றத்தின் போரதீவுப்பற்று பிரதேச சம்மேளனத்தின் புதிய தலைவராக கு.பிராந்த அவர்களும் செயலாளராக பதவிநிலை உத்தியோகஸ்தர் போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் அவர்களும் பொருளாளராக த.அனோஜன் அவர்களும், தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை உபதலைவராக அ.விஜிதா, உபசெயலாளராக க.பகிரதன், அமைப்பாளராக புண்ணியமூர்த்தி, உப அமைப்பாளராக வேணுஜா, விளையாட்டுப்பிரிவு பொறுப்பாளராக விதுர்ஷன், கலை கலாசார பிரிவு பொறுப்பாளராக சரணியா,முயற்சியாண்மை குழுப் பொறுப்பாளராக ச.குகரங்கன், தகவல் மற்றும் தொழில் நுட்ப பொறுப்பாளராக தேசிகன், தேசிய சேவைகள் குழு பொறுப்பாளராக விவிகரன், கல்வி தொழில்நுட்ப குழு பொறுப்பாளராக ரகுபதி, நிதிப்பிரிவு பொறுப்பாளராக நிசாந்தன், சூழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக ஓ.மயூறிகா, கணக்குப் பரிசோதகராக ரகுசாந்தன், அசர்களும் ஒழுக்க நன்னடத்தை குழுவுக்காக த.வானதி, த.பிரசாந்தன், ந.சுபாஜினி,  புலோஜினி, பிறேமரெத்தினம், அவர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு ஆலோசனைக்குழுவுக்கு 

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், தேசிய இளைஞர்  சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர், முன்னாள் பிரதேச சம்மேளனத் தலைவர் கிவேதன், மற்றும் ஜெயக்காந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.














SHARE

Author: verified_user

0 Comments: