(சக்தி)
போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கலைஞர்கள், மற்றும் இலக்கியவாதிகளிடமிருந்து, இவ்வருடத்திற்கான தேசிய இலக்கிய விழா போட்டிக்குரிய விண்ணப்பங்கள் கோரப்படுவதாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் தேசிய இலக்கிய விழாபோட்டிக்குரிய பொது நிபந்தனைகளாக
1. சுய ஆக்கமாக இருத்தல் வேண்டும் இவ் அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய ஆக்கமாக இருத்தல் கூடாது.
2. விண்ணப்பதாரி தமிழ்மொழி மூலமாக பங்குபற்றலாம். (குண நிறைவற்றதாக இருப்பின் போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும்)
3. மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி கலாசார உத்தியோகத்தர், பிரதேசசெயலகம், வெல்லாவெளி என்ற முகவரிக்கு பாடசாலை மட்ட போட்டிக்குரிய ஆக்கங்கள் யாவும் 28.02.2014ம் திகதிக்கு முன்னரும் திறந்த போட்டிக்குரிய ஆக்கங்கள் யாவும் திர் வரும் 30.05.2014 முன்னரும் நேரடியாகவே, அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். என கோரப் பட்டுள்ளது
4. திறந்த போட்டித் தொடரில் பங்கு பெறும் போட்டியாளர்கள் பிரதேச செயலாளரினால்
தங்களது ஆக்கம் சுய தயாரிப்பு என சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
5. போட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு போட்டியாளர் எத்தனை போட்டிகளிலும் பங்கு கொள்ள முடியும்.
6. ஆலோசனைக் கோவைக்கு முரணாக தயாரிக்கப்படும் ஆக்கங்கள் போட்டியில் இருந்து நீக்கப்படும்.
7. ஆக்கத்தினை தட்டச்சாகவோ, அல்லது. கையெழுத்தின் மூலமாகவோ ஏ4 கடதாசியின் ஒருபக்கம் மாத்திரமே பாவிக்க முடியும்.
8. நடுவர்தீர்ப்பே இறுதித்தீர்ப்பாக அமையும்.
9. ஆக்கத்தாளில் ஏதாவது விசேட குறிப்புக்கள் குறிப்பிடல் ஆகாது.
10. குறிப்பாக விண்ணப்பம் தவிர்த்து ஆக்கங்களில் பெயர்கள், பாடசாலை பெயர் எக்காரணம் கொண்டும் எழுதப்படக் கூடாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உத்தேசிக்கப்பட்டுள்ள போட்டிகள் பாடசாலை பிரிவு போட்டிகள் பாலர் பிரிவு-வயது 06-10 வரையுள்ள மாணவர்கள் கவிதைபாடல் போட்டி. கையெழுத்துப்போட்டி,
கனிஷ்ட பிரிவு-வயதெல்லை 11-15 வரையிலான மாணவர்கள் கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, கவிதை பாடல் போட்டி.
சிரேஷ்ட பிரிவு-வயதெல்லை 16-19 வரையிலான மாணவர்கள்
கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, கவிதை பாடல் போட்டி, பாடல் நயத்தல்போட்டி.
திறந்த பிரிவு- வயதெல்லை 19 இற்கு மேற்பட்டவர்கள்
பாடல் ஆக்கப்போட்டி, நாட்டார் கலை கற்றல் போட்டி, இலக்கிய விபரணப்போட்டி,சிறுகதைப் போட்டி, கவிதைப்போட்டி, சிறுவர் கதை ஆக்கப் போட்டிகள் என்பந நடைஇடம்பெறவுள்ளன.
01) போட்டித் தலைப்புகள் :- கட்டுரைப் போட்டிஃகவிதைப் போட்டி - கனிஷ்ட பிரிவு/சிரேஷ்ட பிரிவு களுக்குரிய இப்போட்டிககாக எம்மால் தனியாக தலைப்புகள் தரப்படமாட்டாது என்பதுடன் “ஆக்கபூர்வமான படைப்புக்களால் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பிற்கு அல்லது கருப்பொருளுக்கு அமைவானதாக உங்கள் சிந்தனைக்கு ஏற்ப தயாரித்தல் வேண்டும்.
கனிஷ்டபிரிவு கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகள் 1000 – 1500 வசனங்களைக் கொண்டதாக அமைதல் அவசியமாகும். சிரேஸ்ட பிரிவு கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகள் 1500 – 2000 வசனங்;களைக் கொண்டதாக அமைதல் அவசியமாகும்.
இவ்விரு கவிதைப் போட்டிகளுக்குமான கவிதைகள் பத்து செய்யுட்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும் (40 வரிகள்)
02) கவிதை பாடல் போட்டி – பாலர்பிரிவு
உங்களால் தெரிவு செய்யப்பட்ட 3 செய்யுட்கள்
03) கவிதை பாடல் போட்டி - கனிஷ்ட பிரிவு
பாரதியார் கவிதைகள், தூதுக்காவியங்கள், நாட்டார் நாடகங்கள், கூத்துக்களில் இருந்தோ அல்லது பலதரப்பட்ட நாட்டார் பாடல்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களாகவும் 03 செய்யுட்;களைக் (16வரிகள்) கொண்ட தாகவும் அமைதல் வேண்டும். தங்களால் அனுப்பப்படும் பிரதிகளில் உள்ளவற்றை நாம் கோரும் போது இசையுடன் பாடிக் காட்ட தயாராக இருக்க வேண்டும்.
04) கவிதை பாடல் போட்டி - சிரேஸ்ட பிரிவு
பாரதியார் கவிதைகள், புராணக் கதைகள், தூதுக்காவியங்கள், நாட்டார் நாடகங்கள், கூத்துக்களில் இருந்தோ அல்லது பலதரப்பட்ட நாட்டார் பாடல்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களாகவும் 03 செய்யுட்;களைக் (16வரிகள்) கொண்ட தாகவும் அமைதல் வேண்டும். தங்களால் அனுப்பப்படும் பிரதிகளில் உள்ளவற்றை நாம் கோரும் போது இசையுடன் பாடிக் காட்ட தயாராக இருக்க வேண்டும்.
05) கையெழுத்துப் போட்டி – பாலர் பிரிவு
இப்போட்டிக்கு 06 -10 வயதினரைக் கொண்ட சிறுவர்கள் மட்டுமே பங்கு பற்றலாம் அதிபர் வயதினை உறுதிப்படுத்துபவராக கொள்ளப்படுவார். எழுத்துக்களின் சரியான வடிவம், எழுத்துப் பிழையின்றி எழுதுதல் தெளிவான எழுத்து என்பன கவனத்தில் கொள்ளப்படும். புள்ஸ்கெப் தாளின் தனிப்பக்கத்தை உபயோகித்து முன்வைத்தல் வேண்டும். தங்களால் அனுப்பப்படும் பிரதிகளில் உள்ளவற்றை நாம் கோரும் போது எழுதிக் காட்ட தயாராக இருக்க வேண்டும்.
06) பாடல் நயத்தல் போட்டி
நீங்கள் விரும்பிய தலைப்பின்கீழ் இலக்கிய, சங்ககால பாடல் ஆக்கத்தை முன்வைக்க முடியுமானதுடன் 500-1000 வசனங்களை கொண்டிருத்தல் வேண்டும் ஒருவருக்கு ஒரு ஆக்கத்தை மாத்திரமே முன்வைக்க முடியும்.
திறந்த பிரிவுக்கான போட்டிகளாவன
பாடல் ஆக்கம்
நீங்கள் விரும்பிய தலைப்புகளின் கீழ் பாடல் ஆக்கத்தை முன்வைக்க முடியுமானதுடன் ஒருவர் ஒரு ஆக்கத்தினை மாத்திரமே முன்வைக்க முடியும்.
நாட்டார் கலை கற்றல்
எமது பிரதேசத்திற்குரிய 10 வகையான நாட்டார் கலைகளின் தொகுப்பாக இது அமைய வேண்டும் ( கிராமிய கவிதை, நாட்டார் பாடல்கள், மாந்திரிகச் செயல் முறைகள், உவமைகள் போன்றவையோ…. அல்லது கிராம பெயர்கள் தொடர்பான விவரணம்) தேர்ந்தெடுக்கப்படும் நமது பிரதேசத்தினைச் சேர்ந்த
10 கிராமங்களின் நாமங்கள் வரக்காரணம் தொடர்பான விவரணம்
இலக்கிய விவரணப் போட்டி
உங்களால் தேர்ந்தெடுக்கப்படம் நாவல், சிறுகதை, மொழி பெயர்ப்பு, கவிதைகள் தொகுப்பு, பாடல்கள் தொகுப்பு, மேடை நாடகம் தொடர்பான விமர்சனம். (இக் கால வெளியீடு செய்யப்பட்ட நூல்களை முன்வைப்பதை தவிர்க்கவும்)
சிறுகதைப் போட்டி
நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் ஆக்கத்தினை முன்வைக்கலாம்.
கவிதை ஆக்கப் போட்டி
நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் மரபுக் கவிதையாக அமையின் 10 செய்யுள்களும் (30 பாடலடிகள்) புதுக் கவிதையாயின் 30 வரிகளுக்கு உட்பட்டதாகவும் அமைதல் வேண்டும். ஆக்கப்படும் கவிதைகள் அனுபவத்தின் அபூர்வம் மற்றும் காவிய மொழி என்பவை பற்றி கவனம் செலுத்த வேண்டும்;.
சிறுவர் கதை ஆக்கப்போட்டி
நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் சிறுவர்களின் உள நிலைக்குப் பொருத்தமான கதையாக அமைய வேண்டும். எனவும் மேற்படி பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment