(கமல்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிதத்தினை புணரமைப்பு செய்து கலாசார மண்டபமாக இன்று (02.02..2014) உத்தியோக பூர்வமாக திறந்த வைக்கப்பட்டுள்ளது.
மண்முனைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.சிவபாதசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாகணசபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் , கிழக்கு மாகாண சுகாதார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் அவர்களும் கலந்து கொண்டு நாடவை வெட்டி திறந்து வைத்தனர்.
இதுவரை காலமும் கூட்டுறவுச் சங்கக் கட்டிடமாக இருந்து வந்த இக்கட்டிடம்,
கிழக்கு மாகாண சுகாதார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஐந்து லட்சம் ரூபா நிதியுயொதுக்கீட்டின கீழ் தற்போது புணரமைப்புச் செய்யப்பட்ட இக்கட்டிடம் இன்றிலிருந்து கலாசராம மண்டபமாக மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இனிமேல் இப்பிரதேச மக்களின் கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் இக்கட்டிடத்தில் நடைத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்தாகவும், மண்முனைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.சிவபாதசுந்தரம் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவி ஆணையாளர் எஸ்.கிருபைராசிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment