(கமல்)
இலங்கையில் 66 சுதந்திர தினம் கொண்டாடப்படுவதனையிட்டு இலங்கையன் என்றவகையில் சந்தோசமடைவதுடன் நான் இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவன் என்றவகையில் வேதனையடைகின்றேன். சுதந்திர தினம் என்பது நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அமைய வேண்டும்.
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து–கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார். 66வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு அவர்ன வெளயிட்டுளள அறிக்கையிவேயே அவர் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.
ஒரு நாட்டுக்குள்ளே பெரும்பான்மையினம் சுதந்திர தினம் கொண்டாட சிறுபான்மை இனம் சோதனைகளையும்இ வேதனைகளையும்இ அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது எவ்வாறு அந்த இனம் சுதந்திரத்தினை ஏற்றுக் கொள்ளும்.
இன்று இந்த நாட்டில் உண்ண உணவின்றிஇ உறக்கமின்றிஇ சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமலும் தாயைஇ தந்தையைஇ சகோதரத்ததைஇ இளந்தும் தொலைத்தும் இருந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த மக்கள் எவ்வாறு சுதந்நிரதினம் கொண்டடாடமுடியும்.
இந்த நாட்டின் தலைமைகள் எமது மக்களின் இன் நிலையை போக்கியபின்னரே சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.
அது மாத்திரமின்றி இந்த நாட்டில் ஓர் இனத்துக்கு குரல் கொடுக்கின்றவர்களின் குரல்களை நசுக்குமளவிற்கு பிரிவினைவாதம் சில பெரும்பான்மை இனத்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான இனவாதிகளையும் இந்த அரசாங்கம் வைத்துக் கொண்டு சுதந்திரதினம் கொண்டாடமுடியாது. ஏனென்றால் இவர்களுக்கு தமிழினம் நிம்மதியாக வாழ்வது பிடிக்காது.
சிறுபான்மை இனத்தின் விடுதலைக்கு பின்னரே இந்த நாட்டுக்கு சுதந்திர தினம் என்பது பொருத்தப்பாடாக அமையும். அல்லாத பட்சத்தில் இலங்கையில் சுதந்திர தினத்தினை எந்தவொரு தமிழனும் எற்றுக் கொள்ளமுடியாத சுதந்திர தினமாகத்தான் கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் படுள்ளது.
0 Comments:
Post a Comment