22 Feb 2014

SHARE
(சக்தி)


களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள குளத்தை புணமைப்புக்கென இரண்டுகோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள குளத்தை திருத்துவதற்கு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன்  அவர்கள் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஊடாக எடுத்த முயற்சியின் பலனாக இக்குளத்தின் புணமைப்புக்கென இரண்டுகோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன்  தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள குளமானது கடந்த பல வருட காலமாக கவனிப்பாரற்று அசுத்தமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக அருகாமையில் உள்ள வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை ஆகியவற்றுக்கு வருகின்ற பொதுமக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கடந்த காலங்களில் எவரும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

அசுத்தமான இக் குளமானது களுவாஞ்சிகுடி நகரத்தின் அழகிற்கு பெரும் இழுக்காக இருக்கின்றமையும்இ நோயைக் குணமாக்க வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு விதங்களில் இடஞ்சலாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் அண்மையில் நடைபெற்ற களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இதன் அபிவிருத்தி தொடர்பாக இறுக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்.

பிரதியமைச்சரும் இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து மேற்படி பிரதியமைச்சர் நகர அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு இதற்கென இரண்டு கோடி ரூபா நிதியினை நகர அபிவிருத்தி அமைச்சிடமிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக  வைத்திய அத்தியட்சகர்  மேலும் தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: