மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட மகிழூ கிராமத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வரை நேற்று மாலை (21) கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலீசார் தெரிவித்தனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாக பொலீசார் மேலும் தெரிவித்தனர்.
இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்இ இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலீசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment