(வரதன்)
கல்குடா வலயத்தின் நாசிவன்தீவு அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் விழா பாடசாலை அதிபர் வி.அரசரெத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.
சேரன்இ சோழன் பாண்டியன் என மூன்று இல்லங்கள் பங்கு பற்றிய இப்பாடசாலை விளையாட்டு விழாவில் முதன்மை அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு சம்பிரதாயப் பூர்வமாக போட்டியினை ஆரம்பித்து பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.வு.தினேஷ் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்இ கோட்டக் கல்வி பணிப்பாளர்இ ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் சி.சந்திரகாந்தன் உரையாற்றுவதனையும் பிரதேச செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆகியேர் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களை வழங்குவதனையும் இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment