27 Feb 2014

வாழ்வாதார உதவி திட்டம்- பட்டிப்பளையில்

SHARE
(துசாந்தன்)

கெயார் நிறுவனமும், பாம் பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து மண்முனை தென் மேற்கு-பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் தெரிவு செய்யப்பட்ட தாந்தாமலைஇ கடுக்காமுனை, மகிழடித்தீவு தெற்குஇ அம்பிளாந்துறை வடக்குஇ ஆகிய நான்கு  பிரிவுகளிளும் தெரிவு செய்யப்பட்ட 100பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக அவர்கள் தற்போது  மேற்கொண்டு வரும் சுயதொழில் அடிப்படையில் உதவிகளை மேற்படி அமைப்புக்கள் வழங்கி வருகின்றன.

இவ்வமைப்புக்களின் உதவியினால் மேற்படி கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளும் தமது வீடுகளிலிருந்தவாறே கைப்பணிப் பொருட்கள் உற்பத்திகளிலும்இ வீட்டுத்தோட்டம்இ போன்ற அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வாழ்வாதார செயற்பாடுகளின் பெறுபேறுகளை  மதீப்பPடு செய்யும் நிகழ்வு (25) இன்று பட்டிப்பளைப் பிரதேசத்தின் கடுக்காமுனை நீர்பாசன திணைக்கள வாளகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கெயார் நிறுவனத்தின் நாட்டுப்பணிப்பாளர் கிரஹாரி அவர்கள; கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் கெயார் நிறுவன உத்தியோகத்தர்கள்இ பாம் பவுண்Nசன் நிறுவன உத்தியோகத்தர்கள்இ மற்றும் பயனாளிகள்இ என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மேற்படி அமைப்புக்களினால் இப்பிரதேச மக்களிடத்தில் மேற்கொள்ளப் பட்டுவரும்; வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் பயனாளிகளிடம் கேட்டு ஆராயப்பட்டன.







SHARE

Author: verified_user

0 Comments: