27 Feb 2014

SHARE
 (துசாந்தன்)


யானைத் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக யானைப் பாதுகாப்புக்கு மின்சார   வேலி அமைத்தல் தொடர்பான கூட்டம் 
யானைத் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக யானைப் பாதுகாப்புக்கு மின்சார   வேலி அமைத்தல் தொடர்பான முன்னாயத்த கூட்டம் நேற்று முன்தினம்  (25) பி.ப.02.30 மணியளவில் மண்முனை தென் மேற்கு-பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா-வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் பட்டிப்பளை பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் யானை தாக்கத்திற்கு உள்ளாகின்ற எல்லைக் கிராமங்களாகிய கச்சக்கொடிஇ தாந்தாமலைஇ ஆகிய கிராமங்களில் யானைப் பாதுகாப்புக்கு மின்சார  அமைப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக எதிர்வரும் 07.03.2014ம் அன்று வேலி அமைக்கும் இடத்தினை உத்தியோகத்தர்கள் சென்று பார்வை இடுவது எனவும்இ அதன் பின்னர் வேலைத் திட்டம் ஆரம்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்  விநாயகமூர்த்தி-முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்இ கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கோ.கருணாகரம்இ இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம், மா.நடராஜாஇ இ.பிரசன்னா மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்இ மட்டக்களப்பு மாவட்ட வன விலங்கு இலாகா சுற்றுவட்ட அதிகாரி கே.ஜானக்க-சாந்தகுமாரஇ அதன் உதவி அதிகாரி ரி.ஜெகதீஸ்இ மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள்இ கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பாலர் கலந்து கொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: