(ஸினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ் பரிவு பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 93 பட்டதாரிகளுக்கு நேற்று முன்தினம் (04) நிரந்தர நியமனம் வழங்கபட்டுள்ளது.
கல்முனை தமிழ் பரிவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, அம்பாறை மாட்ட அரசாங்க அதிபர் கே.விமலாதன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார, பிரதேச செயலக உதவித் திடமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், ஆகியோர் கலந்து கொணடு பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கினர்.
நியமனம் பெறற 93 பட்டதாரிகளும் அரச திணைக்களங்கள், பல்வேறு மற்றும் அமைச்சுக்களிலும், உள்வாங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment